Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய படங்களுக்கு இலவச டிக்கெட் - அசத்தும் ஓடிடி தளம்!

Advertiesment
புதிய படங்களுக்கு இலவச டிக்கெட் - அசத்தும் ஓடிடி தளம்!
, ஞாயிறு, 9 ஜனவரி 2022 (14:05 IST)
புதிய ’theatre Goods.com’ ஒடிடி தளத்தில் புதிய படங்களுக்கான டிக்கெட்டுகளை இலவசமாக பெறலாம் என அறிவித்துள்ளனர்.  

 
நெட்ஃபிலிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் என பிரபல ஒடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கு உக்லகளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதை காரணமாகக் கொண்டே புதிது புதிதாக ஓடிடி தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
 
அந்த வகையில் அமெரிக்காவின் பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் சார்பில் வரும் 15 ஆம் தேதி, ‘தியேட்டர் குட்ஸ் டாட்காம்’ (theatre goods.com) என்ற பெயரில் புதிய ஓடிடி தளம் துவக்கப்படுகிறது. இதில், புதிய படங்களுக்கான இலவச டிக்கெட் பெறலாம் என அறிவித்துள்ளனர்.
 
ஆம், இந்த புதிய ’theatre Goods.com’ ஒடிடி தளத்தில் புதிய படங்களுக்கான டிக்கெட்டுகளை இலவசமாக பெறலாம் என அறிவித்துள்ளனர்.  சினிமா ரசிகர்கள் ஓடிடி தளங்களில் புதிய படங்களை பார்க்க 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்கின்றனர். இந்த இடைவெளியை போக்க  தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களுக்கான இலவச டிக்கெட்டுகளையும் இந்த ஓடிடி  இணையதளத்தில் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு: டுவிட்டரில் தகவல்