Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்படி யோசிக்கவில்லை –அருண் விஜய் பட இயக்குநர் டுவீட்

Advertiesment
அப்படி யோசிக்கவில்லை –அருண் விஜய் பட இயக்குநர் டுவீட்
, புதன், 2 ஜூன் 2021 (21:39 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்தவர் சேரன். தற்போது நடிகராகவும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

சேரன் நடித்து, இயக்கி வெற்றி பெற்ற ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, போன்ற படங்கள் பெரிய வெற்றி பெற்றன.

இவர் அருண்விஜய், ராஜ்கிரண் நடிப்பில் பாண்டவர் பூமி என்ற படத்தை இயக்கினார். இதுவும் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இவரது நடிப்பு குறித்து ஒரு ரசிகர் சமூகவலைதளத்தில், சேரன் என்ற நடிகர், தன் கதாபாத்திரத்தின் வலியை மிக சுலபமாக நம்மிடம் கடத்தி விடுகிறார். காதலனாக, கணவனாக, மகனாக, அண்ணனாக, தந்தையாக இப்படி இயல்பான மனிதர்களின் வலியை நமக்கு உணர செய்கிறார் ஒரு மின் காந்த அலை கடத்தி போல எனக் குறிப்பிட்டிருந்தார்.
webdunia

இதற்குப் பதிலளித்த சேரன், நானே அறியா தொடர்... வாழ்வின் முக்கிய கதாபாத்திரங்களின் வழியே நடிகனாக என்னை தக்கவைத்து கொண்டுள்ளேன் என்பதே நான் அறியா சிறப்பு.. நான் இதுவரை அப்படி யோசிக்கவில்லை.. நன்றி உங்கள் பார்வைக்கு..எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகினியில் பீலிங்க்ஸை எகிறவைத்த நடிகை ராய் லட்சுமி!