Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜாவிடம் சேர் வாங்க கூட பணமில்லையா? நெட்டிசன்கள் ஆதங்கம்!

Advertiesment
ilaiyaraja lakshmi
, புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:14 IST)
இளையராஜாவிடம் சேர் வாங்க கூட பணமில்லையா? நெட்டிசன்கள் ஆதங்கம்!
இளையராஜாவிடம் ஒரு சேர் வாங்கக்கூட பணம் இல்லையா என நெட்டிசன்கள் ஆவேசமாக டுவிட்டரில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இசைஞானி இளையராஜாவின் இசையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம் தயாராகி வருகிறது. சமுத்திரகனி, மிஷ்கின் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் பாடல்கள் கம்போசிங் பணி நடைபெற்று வருகிறது 
 
இந்த படத்திற்காக இளையராஜா மூன்று பாடல்களை கம்போஸ் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இளையராஜா இந்த படத்திற்காக கம்போஸ் செய்த போது எடுத்த புகைப்படத்தை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்
 
அதில் இளையராஜா ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்க லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் உட்கார்ந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் தன்னை பார்க்க வரும் விருந்தாளிகளை உட்கார வைக்க ஒரு சேர் வாங்க கூட இளையராஜாவிடம் பணம் இல்லையா என ஆவேசமாக கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் ‘சச்சின்’ படத்தில் நடித்த பிரபல நடிகை கர்ப்பம்: வைரல் போட்டோஷூட்!