Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியலுக்கு வருவேன்! ஆனா வரமாட்டேன்! – முரண்பாட்டு மூட்டை விஜய்!??

Advertiesment
அரசியலுக்கு வருவேன்! ஆனா வரமாட்டேன்! – முரண்பாட்டு மூட்டை விஜய்!??
, திங்கள், 23 செப்டம்பர் 2019 (19:51 IST)
நடிகர் விஜய் முன்னர் பேசிய வீடியோக்களையும், தற்போது பேசும் வீடியோக்களையும் சேர்த்து விஜய் மாற்றி மாற்றி பேசுவதாக இணைய தளங்களில் பலர் ஹேஷ்டேக் செய்து வருகின்றனர்.

பிகில் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு, பிகில் ஆடியோ வெளியீட்டின்போது விஜய் ரசிகர்கள் தாக்கப்பட்டதிலிருந்து விஜய் வெறுப்பாக வெளிவர தொடங்கியிருக்கிறது. விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்த பேச்சுகள் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.

விஜய் தனது பழைய பேட்டிகளில் பேசிய விஷயங்களுக்கு எதிர்முரணான விஷயங்களை தற்போது பேசி தான் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதாக காட்டுகிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். #DoubleStandardVIJAY என்ற ஹேஷ்டேக் மூலம் இந்த வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒரு வீடியோவில் முன்னர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் “எல்லாருக்கும் ரஜினி சார், கமல் சார் மாதிரி ஆகணும்னு ஆசை இருக்கு. எனக்கும் அந்த ஆசை இருக்கு” என்று பேசியுள்ளார். தற்போதைய பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் ”அவன மாதிரி ஆகணும், இவன மாதிரி ஆகணும்னு ஆசைப்படாத. நீ நீயாவே இரு” என்று கூறியுள்ளார்.

அதேபோல அரசியலுக்கு வருவது குறித்து அளித்த பேட்டி ஒன்றில் “அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது. அதற்கான நேரமும், சூழலும் வரும்போது கண்டிப்பாக அது நடக்கும்” என்று கூறியிருக்கிறார். ஆனால் இப்போதோ ”நான் அரசியலுக்கு வர ஆசைப்படவே இல்லை, அப்படி இதுவரை சொன்னதும் இல்லை” என்று சொல்லியிருக்கிறார்.

இதையெல்லாம் ஷேர் செய்துள்ள நெட்டிசன்கள் விஜய் இதற்கு என்ன பதில் சொல்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் விஜய்யோ இது எதுப்பற்றியும் கவலைப்படாமல் லண்டனுக்கு சுற்றுலா சென்று விட்டார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’எவர்கிரீன் ஸ்டார் பட்டம்’ பெற்றார் பிரபல நடிகை ! ரசிகர்கள் ஹேப்பி