Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்தடுத்து வரிசையா படங்கள்; தியேட்டர் ரிலீஸுக்கு முன்னாடியே அறிவித்த நெட்ப்ளிக்ஸ்!

Advertiesment
Netflix releases
, சனி, 14 ஜனவரி 2023 (13:45 IST)
பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் பிரபலமான தென்னிந்திய படங்களின் வெளியீட்டிற்கு முன்பே அதன் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை ஆன்லைனில் வெளியிட்டு வரும் பிரபல ஓடிடி நிறுவனம் நெட்ப்ளிக்ஸ். இந்தியாவிலும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் நெட்ப்ளிக்ஸ் பல்வேறு இந்திய மொழி படங்கள், வெப் சிரிஸ்களை வெளியிட்டு வருகிறது. சில படங்களை தியேட்டர் ரிலீஸுக்கு பிறகும், சில படங்களை பிரத்யேகமாக நேரடியாக ஓடிடியிலும் நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சில படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது நெட்ப்ளிக்ஸ்.

பிரபல தென்னிந்திய நடிகர்களான நானி நடித்துள்ள தசரா, சிரஞ்சீவியின் போலா ஷங்கர், சந்தீப் கிஷன் நடித்துள்ள படி, ரவிதேஜாவின் தமாக்கா என படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படங்களை மூலமொழி மற்றும் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடுவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கலோ பொங்கல்... சீரியல் நடிகை மகேஸ்வரியின் பொங்கல் கொண்டாட்டம்!