Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்ன பண்ணாலும் இந்தியால ஜெயிக்க முடியல..! – நெட்ப்ளிக்ஸ் வேதனை!

என்ன பண்ணாலும் இந்தியால ஜெயிக்க முடியல..! – நெட்ப்ளிக்ஸ் வேதனை!
, வெள்ளி, 28 ஜனவரி 2022 (11:43 IST)
உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுவது சிக்கலாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் தொடங்கியுள்ள நிலையில் அவற்றில் பிரபலமாக உள்ள ஓடிடி தளம் நெட்ப்ளிக்ஸ். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் முக்கியமான ஓடிடி தளமாக உள்ள நெட்ப்ளிக்ஸ் பல்வேறு மொழி படங்கள், வெப் சிரிஸ்களையும் வெளியிட்டு வருவதுடன், சில திரைப்படங்கள், வெப் சிரிஸை தயாரித்தும் வெளியிடுகிறது.

இந்தியாவில் ஓடிடி மார்க்கெட்டை பிடிக்க அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களுடன் நெட்ப்ளிக்ஸ் கடுமையாக போராட வேண்டிய சூழல் உள்ளது. இதனால் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஸ்குவிட்கேம், மணி ஹெய்ஸ்ட் போன்ற தொடர்களை பிராந்திய மொழிகளில் வெளியிட்டது. இந்தியாவில் தனது சப்ஸ்க்ரைபர்ஸை அதிகப்படுத்த சமீபத்தில் தனது மாதாந்திர சந்தாவையும் குறைத்து அறிவித்தது நெட்ப்ளிக்ஸ்.

இந்நிலையில் இந்திய ஓடிடி மார்க்கெட் குறித்து பேசியுள்ள நெட்ப்ளிக்ஸ் சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ் “உலகின் மற்ற நாடுகளின் சின்ன சின்ன மார்க்கெட்டுகளில் கூட நெட்ப்ளிக்ஸின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. ஆனால் இந்தியாவில் எவ்வளவு முக்கியதுவம் அளித்தும் நெட்ப்ளிக்ஸ் வெற்றி பெற முடியாதது வருத்தமளிக்கிறது. எனினும் இதிலிருந்து கற்றுக் கொண்டு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறுக்கமா கட்டியணைத்து பீலிங்ஸில் மூழ்கிய பூனம் பாஜ்வா!