Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இணையும் நெஞ்சுக்கு நீதி கூட்டணி… மேடையில் சீக்ரெட்டை உடைத்த உதயநிதி!

மீண்டும் இணையும் நெஞ்சுக்கு நீதி கூட்டணி… மேடையில் சீக்ரெட்டை உடைத்த உதயநிதி!
, திங்கள், 11 ஜூலை 2022 (16:00 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் வசூல் திருப்திகரமாக அமைந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. சட்டமன்ற தேர்தலில் உதயநிதி வென்ற பின்னர் ரிலீஸான முதல் படமாக நெஞ்சுக்கு நீதி அமைந்தது.

இந்த படம் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியும் பாராட்டுகளையும் குவித்த ‘ஆர்ட்டிகிள் 15’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அருண் ராஜா காமராஜ் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். கடந்த மே 20 ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் சமீபத்தில் ஓடிடியிலும் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் வெற்றிவிழா நடந்தது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘மாமன்னன்’ திரைப்படத்துக்குப் பிறகு ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அந்த திரைப்படத்தையும் அருண்ராஜா காமராஜ்தான் இயக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். இயக்குனர் அருண் ராஜா காமராஜ் ரஜினியை இயக்க அவருக்கு ஒரு கதை சொல்லியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தி கிரே மேன் படத்தின் ப்ரமோஷனுக்காக இந்தியா வரும் இயக்குனர்கள்… தனுஷ் வெளியிட்ட அப்டேட்!