Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!
, வியாழன், 8 ஜூன் 2017 (10:41 IST)
செல்வராகவன் - யுவன் கூட்டணி நீண்ட நாள்களுக்குப் பிறகு இணைந்திருக்கும் படம் இது. செல்வராகவனின் முதல் ஹாரர் படம். இந்த காரணங்களால் ரசிகர்கள் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் தயாராகியுள்ளது.

 
இதோ அதோ என்று  இழுத்துக் கொண்டிருந்த படத்தை  வரும் ஜுன் 23ம் தேதி பட ரிலீஸ் உறுதி என்று படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. யுவனின் பின்னணி இசை, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்  தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரெஜினா,  நந்திதா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
 
முதலில் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது, பின் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் முயற்சி செய்து யு/ஏ வாங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் படத்தில் மீண்டும் பிரபுதேவா