Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் படத்தில் மீண்டும் பிரபுதேவா

விஜய் படத்தில் மீண்டும் பிரபுதேவா
, வியாழன், 8 ஜூன் 2017 (07:02 IST)
பிரபல நடிகர் இயக்குனர், நடன இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபுதேவா கடந்த வருடம் இயக்குனர் விஜய் இயக்கத்தில் 'தேவி' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ஹிட் ஆகியது.



 


இந்த நிலையில் இயக்குனர் விஜய் இயக்கவுள்ள அடுத்த படமான 'கரு' படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டரை இன்று பிரபுதேவா தனது டுவிட்டரில் வெளியிடுகிறார். தேவி படத்திற்கு பின்னர் விஜய்யின் மிக நெருக்கமான நண்பராகிவிட்ட பிரபுதேவா, தனது நண்பர் படத்தின் போஸ்டரை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் இயக்கிய `வனமகன்' படத்தை பிரபுதேவா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே

பிரேமம் புகழ் சாய்பல்லவி நடிக்கும் முதல் தமிழ்ப்படமான 'கரு படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 வருடங்களுக்கு பின் போலீஸ் கேரக்டரில் ரீஎண்ட்ரி ஆகும் மந்த்ராபேடி