பீஸ்ட் படத்துக்குக் கடுமையான விமர்சனங்கள் வந்ததையடுத்து இயக்குனர் நெல்சன் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது அவரின் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸாகி 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நெல்சன் “ஜெயிலர் 2 உருவாக்கும் திட்டம் உள்ளது. அதுமட்டுமில்லை, நான் இயக்கிய பீஸ்ட் மற்றும் டாக்டர் படங்களுக்கும் செகண்ட் பார்ட் உருவாக்கும் எண்ணம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.
இதில் அவரைக் கடுமையாக விமர்சிக்க காரணமாக இருந்த பீஸ்ட் படத்தையும் இணைத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் அமைந்துள்ளது.