Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் DNA படத்தின் ஷூட்டிங் நிறைவு!

அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் DNA படத்தின் ஷூட்டிங் நிறைவு!

vinoth

, திங்கள், 22 ஜூலை 2024 (07:59 IST)
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியைப் பெற்றது.

அதையடுத்து அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஆனால் வசூல் ரீதியாக ஜொலிக்கவில்லை. இதையடுத்து அவர் தற்போது அதர்வாவை வைத்து DNA என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை டாடா, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸர்பைஜான் ஷூட்டிங்கை முடித்த விடாமுயற்சி படக்குழு!