Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயாரிப்பாளர் ஆகும் நெல்சன்… முதல் படத்தின் ஹீரோ இவர்தானா?

தயாரிப்பாளர் ஆகும் நெல்சன்… முதல் படத்தின் ஹீரோ இவர்தானா?
, புதன், 20 செப்டம்பர் 2023 (16:43 IST)
சின்னத்திரையில் இருந்து வந்து இன்று கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக நான்கே படங்களில் உயர்ந்துள்ளார் நெல்சன். அவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் ஜெயிலர் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

அதிலும் கடைசியாக அவர் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது. இதையடுத்து அவரின் அடுத்த படம் எந்த ஹீரோவுடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில் நெல்சன் இப்போது சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும், அவர் தயாரிக்கப் போகும் முதல் படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷ் இணை இயக்குனரோடு இணையும் ராஜ்கமல் பிலிம்ஸ்!