Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் எதிரொலி… ரஜினி படத்தில் மாற்றம் செய்கிறதா சன் பிக்சர்ஸ்!

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (18:31 IST)
பீஸ்ட் படம் மூன்று தினங்கள் ஆகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். நேற்றே சமூகவலைதளங்களில் மீம்களும் ட்ரோல்களும் உருவாகி பரவின. இந்நிலையில் இன்று கேஜிஎப் 2 ரிலீஸாகி மிகப்பெரிய பாராட்டுகளை ரசிகர்களிடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று பீஸ்ட் இரண்டாம் நாளில் நகர்ப்புற பகுதிகளை தவிர மற்ற புறநகர் பகுதிகளில் பெரிய வரவேற்பு இல்லை என சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளே திரையரங்குகள் காலியாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இதனால் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளன. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே கேட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக ரஜினி காத்திருக்கும் நிலையில் தோல்விப் படம் தந்த நெல்சனையே இயக்க சொல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Source valaipechu

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலக்கும் கல்கி 2898 ஏடி.. மூன்றாவது நாளிலேயே மூச்சடைக்க செய்யும் வசூல்!

மச்சானின் காதலியை கரம்பிடித்த மாமா! காமெடி கலாட்டா! – குருவாயூர் அம்பலநடையில் OTT விமர்சனம்!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments