Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்க்கும், பிரபாஸுக்கும் ஒரே வில்லன்

விஜய்க்கும், பிரபாஸுக்கும் ஒரே வில்லன்
, வெள்ளி, 2 ஜூன் 2017 (19:06 IST)
விஜய்க்கு வில்லனாக நடித்த நீல்நிதின் முகேஷ், தற்போது பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கிறார்.


 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘கத்தி’. இரண்டு வேடங்களில் விஜய் நடித்த இந்தப் படத்தில், வில்லனாக நடித்திருந்தார் நீல்நிதின் முகேஷ். இவர், தற்போது பிரபாஸ் நடித்துவரும் ‘சாஹு’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். ‘ரன் ராஜா ரன்’ படத்தை இயக்கிய சுஜித் சாரங், இந்தப் படத்தை இயக்குகிறார்.

யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம், இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘விஸ்வரூபம்’ படத்துக்கு இசையமைத்த ஷங்கர்-ஈசன்-லாய் மூவரும், இந்தப் படத்துக்கு இசையமைக்கின்றனர். ‘பாகுபலி’யுடன் வெளியான இந்தப் படத்தின் டீஸர், மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோயினே யார் என்று முடிவாகாத நிலையில், பாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதன் திரையரங்க உரிமையை மிகப்பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவை விட்டு விலகி விடுவேன் - கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு