Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா...

Advertiesment
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா...
, புதன், 19 மே 2021 (20:29 IST)
நடிகை நயன்தாரா நேற்று கொரொனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறப்படும் நிலையில் இன்று இதுகுறித்து சர்ச்சை உருவான நிலையில் இதுகுறித்த  நயன்தாரா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது.

அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் வெளியானதையடுத்து ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசியை வலியவந்து போட்டுக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது காதலியும் நடிகையுமான நயன்தாரா ஆகிய இருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

இந்நிலையில், நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என சர்ச்சை உருவாகியுள்ளது. நேற்று நயன் தாரா தடுப்பூசி போடும்போது, அவருக்கு ஊசி செலுத்தியவர் விரல்களால் ஊசி போடுவது போல் சும்மா பாவ்லா காட்டியதாகவும் ஆனல் இந்தப் புகைப்படங்கள் அவருக்கு ஊசி போட்டதாக பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தன் மீதான் சர்ச்சைக்கு நயன்தாரா விளக்கம் அளிப்பாரா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், நயன்தாராவுக்கு ஊசிபோடும் முன் எடுத்த புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் பரவியதாகவும்,  அவருக்கு சரியாக டோஸ் செலுத்தும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நயன் தாரா தரப்பு தற்போது ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. இதனால் தடுப்பூசியை நயன் தாரா செலுத்தினாரா இல்லையா என்பது குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளை வைக்கப்பட்டுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பின்னணியில் மோடி படம்: மனைவி, குழந்தையுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர்!