ஓடிடியில் நேரடி ரிலீஸ்… நயன்தாரா நடிக்கும் O2 படத்தின் சென்சார் விவரம்

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (09:23 IST)
நயன்தாரா நடிப்பில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ரிலீஸாக உள்ளது O2 திரைப்படம்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நேரடியாக ஜூன் 17 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி எஸ் விக்னேஷ் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதையை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் கதைப்படி ”விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” என சொல்லப்படுகிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்குன் UA சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

கமல் ஒன்னும் பெரிய நடிகர்லாம் இல்லை… தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சர்ச்சைக் கருத்து!

அஜித் 64 படம் தொடங்குவது எப்போது?... ஆதிக் கொடுத்த அப்டேட்.!

அட்லி& அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங் இவ்வளவு முடிந்து விட்டதா? நடிகை கொடுத்த அப்டேட்.!

அடுத்த கட்டுரையில்
Show comments