Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி, பொங்கல் இரண்டையும் ஆக்கிரமித்த நயன்தாரா

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (23:59 IST)
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக நயன்தாரா நடித்த படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால்தான் அவரது மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கின்றது.



 
 
இந்த நிலையில் இந்த வருட தீபாவளி தினத்திலும், வரும் வருடம் பொங்கல் தினத்திலும் நயன்தாரா நடித்த படங்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
 
மெர்சல், உள்பட சுமார் ஐந்து படங்கள் வெளியாகவுள்ள இந்த வருட தீபாவளி தினத்தில் நயன்தாரா நடித்த 'அறம்' படமும் வெளியாகவுள்ளது. அதேபோல் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', விக்ரமின் 'ஸ்கெட்ச்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ள பொங்கல் தினத்தில் நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களுடன் மோதும் நயன்தாராவுக்கு தொடர் வெற்றி கிடைக்கும் என்றே கோலிவுட் திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments