Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லேடி சூப்பர்ஸ்டார் கனவை தகர்த்த டோரா - நயன்தாரா அதிர்ச்சி

Advertiesment
Dora
, செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (15:27 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாராவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


 

 
சமீபகாலமாக, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார் நயன்தாரா. அப்படி அவர் நடித்து வெளியான படம் மாயா. அந்தபடம் வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து, அதே போன்ற பேய் கதையம்சம் கொண்ட  ‘டோரா’ படத்தில் நடித்தார். 
 
இப்படம் வெளியான போது, நயன்தாராவிற்கு 80 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டது. இதனால், இவர்தான் தமிழ் சினிமாவில் லேடி சுப்பர்ஸ்டார் என சமூக வலைத்தளங்களில் கருத்து பரவியது. ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
 
எனவே, தற்போது அவர் நடித்து வரும் கொலையுதிர்காலம், அறம் படங்களின் வியாபாரம் சரியாக இல்லை எனக் கூறப்படுகிறது. டோரா படத்தால் நஷ்டமடைந்த வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் கூறிய விலைக்கு அப்படங்களை வாங்க மறுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
நயனின் லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் ஒரே படத்தில் சரிந்து விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நயன் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் ஹரி – சூர்யா