Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளாக்‌ஷீப் பிரபலத்தை திருமணம் செய்கிறார் நயன்தாரா பட இயக்குனர்: முடிந்தது நிச்சயதார்த்தம்..!

Advertiesment
பிளாக்‌ஷீப் பிரபலத்தை திருமணம் செய்கிறார் நயன்தாரா பட இயக்குனர்: முடிந்தது நிச்சயதார்த்தம்..!

Mahendran

, சனி, 24 ஆகஸ்ட் 2024 (09:41 IST)
பிளாக்‌ஷீப் யூடியூப் சேனலின் பிரபலத்தை நயன்தாரா பட இயக்குனர் திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல யூட்யூப் சேனல் பிளாக்‌ஷீப் பல சுவரசியமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக பெண்களின் முன்னேற்றம் குறித்து நந்தினி என்பவர் பேசும் வீடியோக்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் சமீபத்தில் இவர் டியர் என்ற திரைப்படத்தில் நடித்தார் என்ற நிலையில் தற்போது இவருக்கும் இயக்குனர் விக்கி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இயக்குனர் விக்கி, நயன்தாரா நடித்து வரும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் விக்கி - நந்தினி திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படம் ரிலீஸ் ஆனவுடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. விக்கி - நந்தினி நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாட்டு உரிமையில் சாதனை படைத்த சூர்யாவின் கங்குவா!