Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலுக்கு வாய்ப்புக் கிடைக்க உதவிய லேடி சூப்பர் ஸ்டார்… அஜித் 62 –ல் நயன்தாரா இருப்பாரா?

Webdunia
சனி, 19 மார்ச் 2022 (14:08 IST)
அஜித் 62 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

நேற்று வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கான வாய்ப்பை நயன்தாராதான் விக்னேஷ் சிவனுக்கு பெற்றுத் தந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது அஜித் 62 படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் உருவான நானும் ரௌடிதான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments