Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாரா சொகுசு கேரவனில் அதிகாரிகள் சோதனை

நயன்தாரா சொகுசு கேரவனில் அதிகாரிகள் சோதனை
, வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (11:16 IST)
கேரள மாநிலம் கொச்சியில் சினிமா படப்பிடிப்பில்  நயன்தாரா பயன்படுத்திய சொகுசு கேரவனை கேரள மாநில சாலை போக்குவரத்து அதிகாரிகள் சோதனை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 
கேரள மாநிலம் கொச்சியில் கலம்சேரி என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதில் நடிகை நயன்தாரா பங்கேற்றார். அங்கு நடிகர், நடிகைகள் ஓய்வெடுக்க மூன்று சொகுசு கேரவன்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதில் ஒரு சொகுசு வேனை நயன்தாரா பயன்படுத்தி வந்தார்.
 
இந்நிலையில் வேனில் நயன்தாரா ஓய்வெடுத்து கொண்டிருந்த போது, அங்கு சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வேனில்  சோதனை செய்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.  மூன்று சொகுசு வேன்களுக்கும் வரிகள் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.  இதனால் 3 வேனையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூ.2லட்சம் அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்திய பின் வேன்கள் விடுவிக்கப்பட்டன. 
 
இந்த சொகுசு வேன் நயன்தாராவுக்கு சொந்தமானது அல்ல என்றும் வாடகைக்கு எடுக்கப்பட்டவை என்றும் படக்குழுவினர் கூறினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜம்மு தாக்குதல்: ஹன்சிகா கண்டனம்