கதை கேட்க புது ப்ளான் போட்ட நயன்தாரா...

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (14:57 IST)
ஹிரோயின்கள் படப்பிடிப்புக்காக சென்றுவிட்டால், இயக்குனர்கள் சில சமயங்களில் இவர்களிடம் கதை கூற முடியாமல் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால், ஹிரோயின்களுக்கு பட வாய்ப்புகளும் பரிபோகிறது. 
 
இதனால், நயன்தாரா இயக்குனர்களிடம் போனிலேயே கதை கேட்ட துவங்கிவிட்டாராம். சமீபத்தில் நடிகை நயன்தாராவை தொடர்பு கொண்ட ஒரு இயக்குனருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.
 
மலையாள இயக்குனர் தயன் சீனிவாசன் நடிகராகவும் இருக்கிறார். தான்இயக்கும் புதிய படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கதை சொல்ல முடிவு செய்து அவரை தொடர்பு கொண்டார். 
 
செல்போனில் அவரை தொடர்புகொண்டபோது கதை கேட்க சம்மதித்த நயன்தாரா, உங்கள் கதையை போனிலேயே 30 நிமிடத்துக்குள் சொல்லுங்கள். பிடித்திருந்தால் நடிக்கிறேன் இல்லாவிட்டால் என் மீது கோபப்படாதீர்கள் என்றார். 
 
இதையடுத்து கதை சொல்ல ஆரம்பித்தார். அடுத்த 10 வது நிமிடத்திலேயே நயன்தாராவுக்கு கதை பிடித்துவிட நடிக்க சம்மதித்துவிட்டாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழக திரையரங்க விநியோகத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் ‘ஜனநாயகன்’!

பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

கென் கருணாஸ் இயக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்…!

மகுடம் படத்தில் இருந்து இயக்குனர் ரவி அரசு விலகினாரா?... உண்மையில் நடந்தது என்ன?

போட்டியாளர்களைக் கொஞ்சமாவது பேசவிடுங்கள்… விஜய் சேதுபதியைக் குற்றம் சாட்டிய பிரவீன் காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments