Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தலைவர் 168’ படத்தில் திடீரென இணைந்த நயன்தாரா

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (17:44 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருக்கும் நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
ஏற்கனவே மீனா, குஷ்பு, சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் இருக்கும் படத்தில் நயன்தாரா போன்ற பெரிய நடிகைக்கு அப்படி என்ன கேரக்டர் இருக்கும் என்பதுதான் தற்போது அனைவருடைய கேள்வியாக இருக்கிறது. இது எங்கள் லிஸ்டிலேயே இல்லையே என நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர் 
 
இத்தனை பெரும் கூட்டத்தை வைத்து சிறுத்தை சிவா அப்படி என்னதான் படம் எடுக்கிறார் என்ற கேள்வியே தற்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது இந்த கேள்விக்கு படம் ரிலீஸான பின்னர் தான் விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments