நயன்தாரா நடிக்கும் படம் வித்தியாசமான பேய்ப்படமாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
‘லட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்களை இயக்கியவர் கே.எம்.சர்ஜுன். ‘எச்சரிக்கை : இது மனிதர்கள் வாழும் இடம்’ என்ற படத்தின் மூலம் இவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார் சர்ஜுன். ‘குலேபகாவலி’ மற்றும் ‘அறம்’ படங்களைத் தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘ஹாரர் படமான இது, வழக்கமான ஹாரர் படங்களைப் போல இருக்காது. ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார் சர்ஜுன்.