Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த ப்ரமோஷனும் இல்லாமல் ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் கோல்ட் திரைப்படம்!

எந்த ப்ரமோஷனும் இல்லாமல் ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் கோல்ட் திரைப்படம்!
, திங்கள், 28 நவம்பர் 2022 (09:05 IST)
நயன்தாரா நடித்த மலையாள திரைப்படமான ‘கோல்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒரு முறை அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

நயன்தாராவின் ‘கோல்ட்’ திரைப்படம் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த படத்தின் ரிலீஸுக்காக படக்குழுவினர் எந்தவொரு ப்ரமோஷனும் செய்யாமல் வெளியிடுகின்றனர். அதாவது படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் ஆகிய எதுவுமே ரிலீஸ் செய்யாமல் நேரடியாக படத்தை ரிலீஸ் செய்கின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் ஷாலினி தம்பதிகளின் க்யூட்டான புகைப்படம்… இணையத்தில் வைரல்!