அது தெரியாமல்தான் கேமரா முன்னால் நின்றேன்… 22 ஆண்டுகள் நிறைவு செய்தது குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி!

vinoth
வியாழன், 9 அக்டோபர் 2025 (14:59 IST)
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. அதே போல தனிக் கதாநாயகியாகவும் அவர் சில ஹிட்ஸ்களைக் கொடுத்து தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளார். அப்படி அவர் நடித்த மாயா, அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்கள் சூப்பர்ஹிட்டாகின. தற்போது அவர் ‘மூக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதனால் ரசிகர்கள் மற்றும் திரை உலகம் சமீபகாலமாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழி கொடுத்து அழைத்து வந்தனர். இது சம்மந்தமாக நயன்தாரா மேல் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் நயன்தாரா சினிமாவில் நுழைந்து 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் “சினிமாதான் என் காதலாக இருக்கும் எனத் தெரியாமல் 22 ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேமரா முன்னால் நின்றேன். ஒவ்வொரு ‘ஃப்ரேமும்’, ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு அமைதியும் என்னை செதுக்கி என் காயங்களை ஆற்றியது. இதற்காக நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தீபாவளிக்கு வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’.. டிரைலர் ரிலீஸ்..!

விஷாலுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

முதல் கட்டப் படப்பிடிப்பை முடிக்கும் கார்த்தியின் ‘மார்ஷல்’ படக்குழு!

பாகுபலி படத்தில் முதலில் ஹ்ருத்திக் ரோஷன்தான் நடிக்க இருந்தாரா?... தயாரிப்பாளர் கொடுத்த பதில்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸான ‘வார் 2’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments