மிகக் கம்மியான பட்ஜெட்டில் ஒரே ஒரு வீட்டில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்காக நயன்தாரா ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று இந்தபடம் ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது என கருத்துகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஓடிடியில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாம். இதனால் தயாரிப்பாளருக்கு ரிலீஸுக்கு முன்பாகவே இரண்டு மடங்கு லாபம் கிடைத்துள்ளது. திரையரங்கு மூலமாக வரும் லாபம் அனைத்தும் கூடுதல் லாபம்தான் என்று சொல்லப்படுகிறது.