Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதேச படவிழாவில் பாரம்பரிய உடையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

சர்வதேச படவிழாவில் பாரம்பரிய உடையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (18:16 IST)
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கலந்துகொண்டார். அப்போது அவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்திருத புகைப்படம் வைரலாகி வருகிறது.#TigerCompetition

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. இவரும் இவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து, கூழாங்கல் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை வினோத்ராஜ் இயக்குகிறர்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் போட்டியிட்டுள்ளது. எனவே அங்கு சென்றுள்ள நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி –சேலையில் அணிந்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
webdunia

மேலும் நயன் தாரா  தற்போது நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ச் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திக்காக காத்திருந்த இயக்குனர்… கடைசியில் கிடைத்தது இந்த நடிகர்தானாம்!