அந்த கோவிலுக்கு போயிட்டு வந்ததும் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு கல்யாணம்!

சனி, 1 ஆகஸ்ட் 2020 (08:28 IST)
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள்.  மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நயன்தாராவிற்கு தோஷம் இருப்பதாக ஜோசியர் ஒருவர் கூறி அவரை காளஹஸ்தி கோவிகளுக்கு சென்று வழிபட அறிவுறை கூறியுள்ளார். இதனால் நயன்தாரா கடந்த சில மாதங்களாக விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கோவில் கோவிலாக வழிபாடு வந்தாராம். இதற்கிடையில் கொரோனா வந்துவிட்டதால் ஜோசியர் கூறிய கோவில்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவான் மணக்கோலத்தில் சிவனை வேண்டிப் பிரார்த்திக்க சொல்லியிருக்கிறார்.

அங்கு சென்று வந்தால் திருமணத்தடை முற்றிலும் விலகிடும். அதனால் அங்க போயிட்டு வந்ததும் திருமணத்தை வெச்சிக்கோங்க’ எனச் சொல்லியிருக்கிறார் ஜோதிடர். அதனால் கொரோனா ஊரடங்கு சற்று தளர்ந்ததும் அங்கு சென்று வந்து திருமணம் செய்யவுள்ளனர். அந்த ஜோசியர் தான் நயன் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அடைவார் என முன்பே கணித்து கூறினாராம். அதனால் தான் கிறிஸ்துவ பெண்ணாக இருந்தாலும் நயன் அந்த ஜோசியர் மீதும் ஜோதிடத்தின் மீதும் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பார்ட்டி உடையில் கலக்கலான போட்டோ ஷூட் நடத்திய பிரியா ஆனந்த்!