நயன்தாரா படத்துக்குப் பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்

Webdunia
சனி, 12 மே 2018 (10:39 IST)
நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்துக்காகப் பாடலாசிரியராக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். 
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோகோ’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ…’ என முதல் பாடல் ஏற்கெனவே ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில், மே 17ஆம் தேதி இரண்டாவது லிரிக்கல் வீடியோவை ரிலீஸ் செய்யப் போவதாக அனிருத் அறிவித்துள்ளார். ‘கல்யாண வயசு’ என்று தொடங்கும் இந்தப் பாடலை எழுதியவர், முதன்முதலாக  இப்போதுதான் பாடல் எழுதுகிறார். அவர் யார் எனத் தெரியுமா? என சஸ்பென்ஸ் வைத்த அனிருத், நேற்று மாலை அது யார் என்ற தகவலையும் ட்விட்டரில்  தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தான் அந்தப் பாடலாசிரியர். நயன்தாராவுடன் இணைந்து ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், இரண்டாவது முறையாக  எம்.ராஜேஷ் இயக்கும் படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments