Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவின் காதலர் இயக்கும் படத்தில் சூர்யா

நயன்தாராவின் காதலர் இயக்கும் படத்தில் சூர்யா
, செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (15:13 IST)
நயன்தாராவின் தற்போதைய காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனின் புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கிறது.


 
 
எஸ் 3 படத்தைத் தொடர்ந்து சூர்யா முத்தையா இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ரஞ்சித்தும் அவரை இயக்குவதாக இருந்து, சின்ன பிரச்சனை காரணமாக, என்னுடைய அடுத்தப் படத்துக்காக யாரையும் அணுகவில்லை என்று ரஞ்சித் பேக்கடித்தார்.
 
இந்நிலையில், சூர்யாவின் அடுத்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என ஸ்டுடியோ கிரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவரது முதல் படம் போடா போடி தோல்வியடைந்தாலும், இரண்டாவது படம், நானும் ரௌடிதான் வெற்றி பெற்றது.
 
இந்தப் படத்தின் போதுதான் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்கத் தொடங்கினர் என்பது முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல இயக்குனர்கள் 'கள்ளன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்!