Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நயன்தாராவும், சமந்தாவும் ஒரே படத்தில்...

நயன்தாராவும், சமந்தாவும் ஒரே படத்தில்...
, திங்கள், 11 டிசம்பர் 2017 (10:08 IST)
நயன்தாரா, சமந்தா இருவரும் ஒரே படத்தின் வேறு வேறு ரீமேக்கில் நடிக்கிறார்கள்.
கன்னடத்தில் வெளியான ‘யு டர்ன்’, சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படம். பவன் குமார் இயக்கிய இந்தப் படம், கடந்த வருடம் ரிலீஸானது. ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘ரிச்சி’ படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஹீரோயினாக நடித்திருந்தார்.  பவன் குமார் தயாரிப்பில் வெளியான இந்தப் படம், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
 
இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். கடந்த வாரம் வெளியான ‘சத்யா’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தை இயக்குகிறார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். தெலுங்கிலும் இந்தப்  படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார்கள். அதில் சமந்தா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
கங்கனா ரனாவத் நடிப்பில் ஹிட்டான ‘குயின்’ ஹிந்திப் படம், தென்னிந்திய மொழிகள் நான்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பருல் யாதவ்வும் நடிக்கின்றனர். அதேபோல் இந்தப் படமும் தற்போதைக்கு இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. விரைவில்  மலையாளத்தில் ரீமேக் செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீனவர்கள் போராட்டத்தில் ஜி.வி.பிரகாஷ்