Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து முடிவைக் கைவிட்ட நவாசுதீன் சித்திக்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (07:01 IST)
நடிகர் நவாசுதீன் சித்திக் தனது மனைவியை விவாகரத்து செய்யும் முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார்.

ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அவருக்கு இந்தி மொழி தாண்டியும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் அவர் ஒரு வருடத்துக்கு முன்னர் தனது மனைவி ஆலியாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இப்போது ஓராண்டு கழிந்துள்ள நிலையில் அந்த முடிவில் இருந்து இருவரும் பின் வாங்கியுள்ளனர். குழந்தைகளுக்காக இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளனர். மேலும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆலியாவிடம் நவாசுதின் அன்பாக நடந்துகொண்டது மீண்டும் அவர்கள் இல்லற வாழ்க்கைக்கு திரும்ப உதவியதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments