தலைவிரித்தாடும் குடும்ப பிரச்சனை... பேட்ட நடிகருக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய மனைவி!

செவ்வாய், 19 மே 2020 (08:37 IST)
பாலிவுட்டில் முன்னணி  நடிகராக வலம்  வருபவர் நடிகர்  நவாசுதின் சித்திக். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் "சிங்காரம்" என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தார். கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே அடித்து தூள் கிளப்பிவிட்டார்.

46 வயதாகும் நடிகர் நவாசுதின் சித்திக்கிற்கு ஆலியா என்ற மனைவி இருக்கிறார். மகன் , மகள் என இரண்டு குழந்தைகள் இருந்து வரும் நிலையில் இந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ஆனால், இருவரும் முறையாக விவகாரத்து பெறவில்லை.

இந்நிலையில் மனைவி ஆலியா சித்திக், நவாசுதினுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது பாலிவுட் சினிமாவின் தற்போதைய ஹாட் செய்தியாக பேசப்பட்டு வருகிறது. இந்த டைவர்ஸ் விவாகரத்திற்கு நவாசுதின் தரப்பில் இருந்து அடுத்த  15 நாட்களுக்குள் எந்த ஒரு பதிலும் வரவில்லை என்றால் தான் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போவதாக அவரது மனைவி கடுமையாக எச்சரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் முழு நிர்வாண வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை