Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியை அடுத்து விஜய்க்கு வில்லனாகிறாரா நவாசுதீன் சித்திக்!

ரஜினியை அடுத்து விஜய்க்கு வில்லனாகிறாரா நவாசுதீன் சித்திக்!
, சனி, 20 பிப்ரவரி 2021 (10:36 IST)
நடிகர் நவாசுதீன் சித்திக் விஜய்யின் 65 ஆவது படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க நவாசுதீன் சித்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்மாலிடம்  வில்லன் கதாபாத்திரத்துக்காக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் 10 வருடமாக லாக்டவுனில் இருக்கிறேன்… வடிவேலு உருக்கம்!