Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரிஜினல் ஐடில வந்து திட்டுங்க: கர்ணன் நடிகரின் டுவிட்டால் பரபரப்பு!

Advertiesment
ஒரிஜினல் ஐடில வந்து திட்டுங்க: கர்ணன் நடிகரின் டுவிட்டால் பரபரப்பு!
, வெள்ளி, 28 மே 2021 (10:07 IST)
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வந்த நிலையில் அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நட்டி நட்ராஜ் ஒரிஜினல் ஐடியில் வந்து திட்டுங்கள் என்று டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கர்ணன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நட்டி நடராஜனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் அவருடைய கேரக்டர் தனுஷை கொடுமை படுத்துவது போல் இருந்ததால் தனுஷ் ரசிகர்கள் பலரும் அவரை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வந்தனர். ஒரு சிலர் மரியாதை குறைவாக விமர்சனம் செய்ததாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் நட்டி நடராஜ் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஒரு படத்துல நடிக்கிறோம்...அதை விமர்சிக்க பலருக்கு உரிமை உண்டு.. ஆனா original id la வாங்க ... fake id la வராதீங்க.. யாருன்னே புரிஞ்சுக்க  முடியல..ஜாஸ்தியா வேற comment பண்றீங்க...abusive language வேணாங்க..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக பிருத்விராஜ்… மலையாள திரையுலகம் ஆதரவு!