விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது.
விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.
இந்த படம் ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக இயக்குனர் நித்திலன் கூறியுள்ளார். இன்று சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படத்தின் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நட்டி நட்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். சமீபகாலமாக நட்டி நட்ராஜ் அதிகளவில் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.