Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புஷ்பா 2 படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற நடிகை… எகிறும் எதிர்பார்ப்பு!

புஷ்பா 2 படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற நடிகை… எகிறும் எதிர்பார்ப்பு!
, புதன், 3 ஆகஸ்ட் 2022 (09:00 IST)
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். புஷ்பா சர்வதேச சந்தையை பிடிக்க முயலும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லுவதாக இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதற்காக ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளதாக திரை வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகம் மிகப் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளது. இதற்காக படத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு முக்கியமான வேடத்தை இணைத்துள்ளனர். அதுபோலவே மற்றொரு முக்கிய வேடத்தில் தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணத் தட்டுப்பாட்டால் வசித்த வீட்டை விற்ற ஆம்பர் ஹெர்ட்…!