Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கடேஷ் பிறந்தநாள் பரிசு… வெளியானது தெலுங்கு அசுரன் ரீமேக் டீசர் !

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (07:54 IST)
தமிழில் வெளியாகி பெருவெற்றி பெற்ற அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவின் டீசர் வெளியாகியுள்ளது.

தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது . இந்நிலையில் இந்த படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்யும் முனைப்புகளில் உள்ளனர்.

தெலுங்கில் அசுரன் படத்தில் நடிப்பதற்கு நடிகர் வெங்கடேஷ் ஆர்வமாக இருக்க தமிழில் தயாரித்த தாணுவே தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு அவர்களுடன் இணைந்து இந்த படத்தை தெலுங்கில் தயாரிக்கின்றார். இந்நிலையில் அந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நடிகை பிரியா மணி நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வெங்கடேஷின் பிறந்தநாளை முன்னிட்டு நாரப்பாவின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அச்சு அசல் அசுரன் போலவே எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் ரசிகர்களும் பார்த்து கருத்து சொல்லி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

மீண்டும் ஒரு பீரியட் கதையில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி… வெளியான அறிவிப்பு!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா?

சூர்யாவுக்கு மட்டும் flop கொடுத்தேனா?... இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments