Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனிக்கிழம மட்டும் இவனக் கண்ட்ரோல் பண்ண முடியாது… நானியின் புதிய பட க்ளிம்ப்ஸ் ரிலீஸ்!

சனிக்கிழம மட்டும் இவனக் கண்ட்ரோல் பண்ண முடியாது… நானியின் புதிய பட க்ளிம்ப்ஸ் ரிலீஸ்!

vinoth

, ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (07:20 IST)
நானி, பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் பான் இந்தியா படமான 'சரிபோதா சனிவாரம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். புகழ்மிகு  இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் 'சரிபோதா சனிவாரம்' திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. சனிக்கிழமை மட்டும் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முரட்டு இளைஞராக நானி இந்த படத்தில் நடித்துள்ளார் என்பதை கிளிம்ப்ஸ் வீடியோ காட்டுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு தோல்விக்குப் பிறகு நிறைய அன்பு கிடைத்தது… லால் சிங் சத்தா குறித்து அமீர்கான் ஓபன் டாக்!