தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒளிபரப்பாக இருக்கிற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிகளை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற விவரம் கிடைத்துள்ளது.
கடந்த வருடத்தில் இருந்து, தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக மாறிவிட்டது ‘பிக் பாஸ்’. 100 நாட்கள் எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் விதிமுறை.
கடந்த வருடம் தமிழில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், ஆரவ் வெற்றி பெற்றார். இந்த வருடமும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். ஜூன் 17-ம் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இந்த வருடம் யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற விவரம் கிடைத்துள்ளது. தெலுங்கில் நானியும் (’வெப்பம்’, ‘நான் ஈ’, ‘ஆஹா கல்யாணம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர்), மலையாளத்தில் மோகன்லாலும் இந்த வருட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார்கள்.