Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் சாமி ஆடிய நந்திதா ஸ்வேதா - கவனத்தை ஈர்க்கும் வீடியோ

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (13:15 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
 
ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த "இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா " படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். சிபிராஜ் நடிப்பில் உருவான கபடதாரி படத்திலும் நடித்துள்ளார் நந்திதா.
 
இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஐபிசி 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என மொத்த மசாலாக்களை அடங்கிய இப்படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ளார். ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வருகிறது.
 
லாக்டவுனுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஆனால் சமீபத்தில் தான் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் முடிந்தது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் அங்காளி தாயே பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் முழுக்க நந்திதா நடுரோட்டில் வெறித்தனமாக சாமி ஆடுகிறார். . 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்