Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பமான வயிறோடு நமீதா வெளியிட்ட சர்ப்ரைஸ் புகைப்படங்கள்! இணையத்தில் வைரல்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (11:32 IST)
நடிகை நமீதா தன்னுடைய புதிய புகைப்படங்களின் மூலம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளார்.

2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களால் பேசப்படும் நடிகையாக வலம் வந்தார். அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப்படங்களில் நடித்து மார்க்கெட்டைப் பிடித்த நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். இப்படி தமிழக மச்சான்ஸ்களின் மனதில் கூடுகட்டி வாழ்ந்த நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பட்டிதொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் திருமணம் செய்துகொண்டார்.

அரசியலிலும் கால்பதித்த அவர் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதை நமீதா அறிவித்துள்ளார். இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கர்ப்பமான வயிறோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments