Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வித்தியாசமான முறையில் குழந்தை பெற்ற நகுல் ஸ்ருதி ஜோடி! வைரலாகும் புகைப்படம்!

Advertiesment
வித்தியாசமான முறையில் குழந்தை பெற்ற நகுல் ஸ்ருதி ஜோடி! வைரலாகும் புகைப்படம்!
, வியாழன், 3 செப்டம்பர் 2020 (13:09 IST)
நடிகை தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல் தனது மனைவியின் பிரசவ புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். அப்போதைய காலத்தில் பிரபல நடிகையாக இருந்த தேவயானியின் சகோதரராக இருந்தாலும், நகுல் நடித்த 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' உள்பட ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் வெற்றி அடையவில்லை.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி பாஸ்கர் என்ற தனது நீண்ட் நாள் தோழியை காதலித்து திருமணம் செய்த நகுல், சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து சமீபத்தில்  நடிகர் நகுலுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து அனைவரது ஆசீர்வாதங்களை பெற்றார்.

இந்நிலையில் அவர்களது மகள் அகீரா பிறந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் தனது மனைவியின் பிரசவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நகுல். அதில் வெளிநாடுகளில் சிலர் தாங்களே தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்து கொண்டு குழந்தை பெறுவதை போல நகுல் மனைவியும் குழந்தை பெற்றுள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியலில் இணைகிறாரா சோனு சூட்? – கொக்கி போடும் கட்சிகள்!