Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னிந்திய நடிகர்கள்னா ஒதுக்குறாங்க..! – நாகார்ஜூனா அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (13:26 IST)
பாலிவுட் சினிமாவில் தென்னிந்திய நடிகர்களை ஒதுக்கும் போக்கு இருப்பதாக நடிகர் நாகார்ஜூனா தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் பிரபல நடிகரான நாகர்ஜூனா தமிழ், கன்னடம் உள்ளிட்ட மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ள நாகர்ஜூனா தற்போது ரன்பீர் கபூர் நடித்துள்ள பிரம்மஸ்த்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தென்னிந்திய மொழிகளையும் சேர்த்து பேன் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்தி சினிமா குறித்தி பேசியுள்ள நாகார்ஜூனா ”பாலிவுட்டுக்கு தென்னிந்திய நடிகர்கள் சென்றால் அவர்களை ஒதுக்கும் போக்கு உள்ளது. அதனால்தான் தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட்டில் ஜொலிக்க முடிவதில்லை. வடநாட்டுக்கு எங்கு சென்றாலும் தென்னிந்திய நடிகர் என்றுதான் சொல்வார்கள். இதற்கெல்லாம் வருந்த தேவையில்லை. ஏனென்றால் தற்போது தென்னிந்திய திரைப்படங்கள்தான் பேன் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments