கூலி படத்துக்குப் பிறகு ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கும் பிரபல ஹீரோ!

vinoth
வியாழன், 29 மே 2025 (09:20 IST)
தன்னுடைய 73 ஆவது வயதிலும் தனது அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அதன் காரணமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல சந்தானமும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடிகர் நாகார்ஜுனாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே நாகார்ஜுனா, ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments