Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு படத்தில் நடிக்கிறாரா ஜாக்கி சான்..? இணையத்தில் பரவும் தகவல்!

vinoth
வியாழன், 29 மே 2025 (09:15 IST)
கடந்த 2023 ஆம் ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற  திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்த 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.

இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட இந்த படம் ஆஸ்கர் விருதின் பட்டியலில் 15 படங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் தேர்வாகவில்லை. இந்த படத்தின் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை இயக்க லைகா நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் லைகா நிறுவனம் தொடர்ந்து படங்கள் தயாரிக்கப் போவதில்லை என்ற செய்தி அடிபடுவதால் ஜூட் ஆண்டனி வேல்ஸ் நிறுவனத்தோடு ஒரு படம் பண்ண பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த படத்தில் சிம்பு நடிப்பார் என சொல்லப்பட்டது.

ஆனால் அடுத்தகட்டத்துக்கு இந்த படம் இன்னும் நகரவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் ஜாக்கி சான் மற்றும் மோகன்லால் ஆகியோரை நடிக்க வைக்க ஜூட் ஆண்டனி முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களின் ரி ரிலீஸ் திட்டம்… தயாரிப்பாளர் அறிவிப்பு!

ஆமையும் ஒரு உயிர்தான்… நெகட்டிவ் தலைப்புகள் ஏன்? – விஜய் ஆண்டனி பதில்!

‘அன்பு மன்னிப்புக் கேட்காது… அரசியல்வாதிகளுக்கு மொழி குறித்துப் பேச தகுதி கிடையாது’ – கம்ல்ஹாசன் பதில்!

பிறந்த நாளில் ஜனநாயகன் அப்டேட் வேண்டாம்.. ஃபுல்லா அரசியல் தான்: விஜய் அதிரடி..!

நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments