Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீர் கான் படத்தில் சமந்தா கணவர்… விஜய் சேதுபதியால் வந்த வாய்ப்பு!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (11:51 IST)
அமீர் கான் நடிக்கும் லால் சிங் லச்சா படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் இப்போது நாக சைதன்யா நடிக்க உள்ளாராம்.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் லட்டா எனும் பெயரில் ரீமேக் செய்து வருகிறார். அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியும் தேர்வானார். ஆனால் அவர் இதுவரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுல்லை. அமீர் கான் நடிக்கும் துபாயில் நடந்து முடிந்தன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. தமிழிலேயே நடிக்க முடியாத அளவுக்கு படங்களை வைத்திருக்கும் அவர் அமீர்கான் படத்துக்கு தேதிகள் ஒதுக்க முடியாததால் அதிலிருந்து வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மற்றொரு தகவலாக படத்தில் ராணுவ அதிகாரியாக நடிப்பதற்காக அமீர்கான், விஜய் சேதுபதியின் உடல் எடையை குறைக்க சொன்னதாகவும், அதை விஜய் சேதுபதி செய்யாததால் அவரைப் படத்தில் இருந்து நீக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அந்த வேடம் தெலுங்கின் முன்னணி நடிகரும் நடிகை சமந்தாவின் கணவருமான நாக சைதன்யாவிடம் சென்றுள்ளதாம். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments