Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

40 வருடங்களாக கமலுடன் நடிக்காத நடிகை… இப்போது கூட்டணி

Advertiesment
40 வருடங்களாக கமலுடன் நடிக்காத நடிகை… இப்போது கூட்டணி
, திங்கள், 28 ஜூன் 2021 (12:22 IST)
பாபநாசம் 2 படத்தில் கௌதமி வேடத்தில் நதியா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகை நதியா தமிழ் சினிமாவில் 80 களின் இறுதி மற்றும் 90 களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர். அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன அவர் மீண்டும் எம் குமரன் திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் ஒரு ரவுண்ட் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தனது இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் கமல் கூட நடிக்கவே இல்லை. கமல் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு உருவான விக்ரம் படத்திலேயே அவர் தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால் கமல் அவரை அந்த படத்துக்காக தேர்வு செய்யவில்லை.

இந்நிலையில் இப்போது பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த கூட்டணி இணையப் போவதாக சொல்லப்படுகிறது. பாபநாசம் 2 படத்தில் கௌதமிக்குப் பதிலாக நடிக்க நதியாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலா பால் நடிப்பில் உருவாகும் குடியெமைதே… விரைவில் ரிலீஸ்!