Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசரவைக்கும் அசுரன் ரிமேக் ஹீரோவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (17:04 IST)
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளி என புகழப்படும் இயக்குனர் வெற்றிமாறன் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு தனுஷை வைத்து "அசுரன்" படத்தை இயக்கியிருந்தார். கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியான இப்படம் சுமார் 100 நாட்களை தாண்டி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது பாக்ஸ் ஆபீஸில் ரெக்கார்டை பதிவு செய்தது. தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியர்...நீயா? நானா? ஒரு கை பார்த்திடுவோம் என போட்டிபோட்டுக்கொண்டு நடித்தது போல் இருந்தது அவரது நடிப்பு. இப்படத்தின் அசுர வசூலை பிற மாநில திரைத்துறையினர். இப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்தனர். 
 
அந்த வகையில் தற்போது இப்படத்தை தெலுங்கில் ஸ்ரீகாந்த் அடாலா இயக்குகிறார். நடிகர் வெங்கடேஷ் டகுபதி ஹீரோவாக நடிக்கிறார். நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை ஒட்டுமொத்தமாக திசை திருப்பியது. கதாநாயகனாக ப்ரியாமணி  நடிக்கும் இப்படத்தின் டைட்டில் "நாரப்பா" என பெயரிடப்பட்டுள்ளது. ஜனவரி 22  இன்று முதல் துவங்கியுள்ள இப்படத்திற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . 

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments